Published on 30/04/2020 | Edited on 30/04/2020
![TAMILNADU CM PALANISAMY ANNOUNCED INDUSTRIES INVESTMENT TEAM](http://image.nakkheeran.in/cdn/farfuture/0gywLehJWGG2nApgKk7ggn_jY1CjcP8-W4TgE2cEn64/1588233256/sites/default/files/inline-images/CM35.jpg)
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா தாக்கத்திற்குப் பின் வெளியேறும் சில நாடுகளின் தொழில் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் நாடுகளின் நிறுவனங்களை ஈர்க்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. வணிக வரி ஆணையர், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குனர் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இடம்பெயரும் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கான வழிகளைக் குழு கண்டறியும். சிறப்புக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்குள் முதல்வரிடம் அளிக்கும்." இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.