கடந்த ஒரு வருடமாக 70 வழக்குகளில் திருடுபோன பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டில் திருட்டு போன 70 வழக்குகளில் தனிப்படையினர் தீவிர புலன் விசாரணை செய்து எடுத்த நடவடிக்கையில் 1 கோடியே ,76 லட்சத்து 15 ஆயிரத்து 400 மதிப்பிலான 5 லாரிகள், 6 கார்கள், 1 மூன்று சக்கர வாகனம் 15 இரு சக்கர வாகனங்கள், 39 கைபேசிகள், 1 மடிகணினி,பணம் ரூ. 10,74,900 ரொக்க பணம் மற்றும் 270 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்களை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று காலை ஈரோடு காவல் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா கலந்து கொண்டு பொருட்களை உரியவர்களிடம் வழங்கினார். பிறகு விழாவில் பேசிய ஐ.ஜி பெரியய்யா பொது மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் , திருட்டு சம்பவங்களில் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது பற்றி விரிவாக விளக்கி பேசினார். அதே போல் இவ்வழக்கில் சிறப்பாக துப்பறிந்து குற்றவாளிகளை கண்டு பிடித்து களவு சொத்துகளை மீட்ட காவல் அதிகாரிகளையும் ஐ.ஜி. பெரியய்யா வெகுவாக பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.