Skip to main content

விளையாடிவிட்டு காவல் பணி செய்யுங்க... ஈரோடு போலீஸ் உடற்பயிற்சி (படங்கள்)

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

 

போலீஸ் டூட்டி என்பது காவல் நிலையத்தில் அமர்ந்து பணி செய்வது, ரோந்துப் பணியில் ஈடுபடுவது, விஐபிகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, போராட்டம் ஆர்ப்பாட்டம் முற்றுகை போன்ற நிகழ்வுகளில் பாதுகாப்பு வழங்குவது. இப்படி தொடர் உடல் நெருக்கடி, மன நெருக்கடியோடு பணி செய்ய வேண்டிய சூழல் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதை தளர்த்தும் வகையில் போலீசார் ஒவ்வொரு நாளும் விளையாட்டு உடற்பயிற்சி. யோகா மற்றும் மூச்சுப் பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் போலீசாருக்கு அறிவுறுத்தியதோடு அதற்கான தொடக்க நிகழ்வையும் இன்று காலை  செய்துள்ளார்.

ஈரோடு ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் ஆண் மற்றும் பெண் போலீசாரை வரவழைத்து யோகா மற்றும் மூச்சுப் பயிற்சியோடு கபடி விளையாடுதல், நீளம் தாண்டுதல், தொட்டு விளையாடுதல் மற்றும் சிலம்பாட்டம் போன்ற பல்வேறு விளையாட்டுகளை நடத்தினார்.

இது ஒரு நாள் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல தினசரி நடக்க வேண்டும். காவல் பணியில் வெளியூர்களில் பணி செய்தாலும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என கூறினார். பெண் போலீசார் கபடி விளையாட்டிலும் ஒருவரையொருவர் தொட்டு விளையாட்டிலும் ஆர்வமாக பங்கு பெற்றனர். ஈரோடு போலீஸாரின் இச்செயல் போலீஸ் குடும்பத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்