Skip to main content

காதல் மனைவி மீண்டும் வருவாரா?

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

கடத்தப்பட்ட எனது மனைவியை மீட்டு தாருங்கள் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பரிதாபமாக மனு கொடுத்தார் ஒரு இளைஞர்.

 

Erode Love issue - Petition to the Collector

 



ஈரோடு மாவட்டம் காவலிபாளையத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு கலெக்டரிடம் மனு வழங்கினர்.பின்னர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:

நானும், ஆயிகவுண்டம்பாளையத்தை  சேர்ந்த ரகுபதி மகள் மெளனிகா என்பவருக்கும் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டோம். இது பற்றி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் மனுக் கொடுத்து,  எங்களுக்கு பெண் வீட்டாரால் இடையூறு ஏற்படாமல் பாதுகாப்பு தர கோரினோம். இரு குடும்பத்தாரையும் அழைத்த போலீசார் சமாதானம் பேசி எழுதி வாங்கி கொண்டனர். 

இந்த நிலையில் சென்ற 9ம் தேதி மெளனிகாவின் உறவினர் ஒருவர் போன் செய்து மௌனிகாவின் தந்தை ரகுபதி உடல் நலக்குறைவால் பெருந்துறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி எங்களை அழைத்தார். இதை நம்பி நானும், மனைவியும் மருத்துவமனை சென்றோம். ஆனால் வழியிலேயே எனது மாமனார் அவரது குடும்பத்தினர் சேர்ந்து என்னை தாக்கிவிட்டு எனது மனைவியின் நகையை பறித்ததோடு அவளையும் கடத்தி கொண்டு போய் விட்டனர்.

இது பற்றி பெருந்துறை போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனது மனைவியை மீட்டு என்னுடன் ஒப்படைக்க வேண்டும். மேலும்  கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பெற்றோர் வீட்டுக்கு சென்ற காதல் மனைவி வருவார் என பரிதாபமாக காத்திருக்கிறார் அந்த இளைஞர்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாலையோர வியாபாரி மீது பாய்ந்த 'பாரதிய நியாய சன்ஹிதா'- அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 'Bharatiya Nyaya Sanhita' on Roadside Vendor - New Criminal Laws Come Into Force

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதி இருந்த கடிதத்தில் 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் இன்று அமலுக்கு வந்ததோடு டெல்லியில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் கவுன்சிலர் கொலை; கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சூறை!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Cuddalore Vandipalayam Former ADMK councilor Pushparajan incident

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். இந்த ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. புஷ்பநாதனை படுகொலை செய்தோரைத் துரிதமாகக் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.