
நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த இரண்டு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏக்களும் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்கவுள்ளனர். அதேபோல் இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த இரண்டு விஷயங்களுக்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் பிறகு எம்ஜிஆர் நினைவு இடத்திலும் மரியாதை செலுத்த இருக்கின்றனர்.