Skip to main content

கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக வழக்கு தொடர இபிஎஸ்க்கு அனுமதி

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

EPS allowed to prosecute Kanagaraj's brother Dhanapal

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் குறித்து அறிந்திருந்தும், அவற்றை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கெனவே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.அதனை தொடர்ந்து இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த சூழலில் கனகராஜின் சகோதரர் தனபால் செய்தியாளர்கள்  சந்திப்பின் போது  எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

 

இதனையடுத்து கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக வழக்கு தொடர எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்