Skip to main content

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

 Enforcement raid on the home of Popular Front of India executives!

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் தேசிய அளவிலான நிர்வாகிகளின் வீட்டில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

வெளி நாட்டுப் பணம் புழங்குகிறதா என்பதே சோதனையின் நோக்கம் என்று அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். அதனடிப்படையில், தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டைப் பக்கமுள்ள பண்பொழிப் பகுதியைச் சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின், தேசிய செயற்குழு உறுப்பினரான முகம்மது அலி ஜின்னாவின் வீட்டில், அதிகாலை 5 மணியளவில், போலீஸ் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

 

 Enforcement raid on the home of Popular Front of India executives!

 

இதையறிந்த, அந்த அமைப்பின் நிர்வாகிகள் திரண்டு வந்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின், தேசிய நிர்வாகிகளின் வீட்டில், அமலாக்கத்துறையை விட்டு அவர்களது சமூகப் பணிகளை முடக்கும் நோக்கத்தில் சோதனை நடத்தப்படுவதாகக் கூறி, மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறையைக் கண்டித்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். சோதனையை முடித்துவிட்டு அவர்கள் கிளம்ப வேண்டும் என்று கோஷமிட்டனர்.

 

இதன்பின், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார், அமலாக்கத் துறையினர் அவர்கள் பணியைச் செய்கின்றனர். யாரும் தலையிடக் கூடாது என்று அவர்களைக் கலைந்து செல்ல வைத்தனர். அந்த வீட்டில் சோதனை இரவு வரை நடந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்