Published on 23/08/2019 | Edited on 23/08/2019
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வார விடுமுறை,மாத ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என 200- க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

அவர்களுக்கு ஒப்பந்த நிர்வாகம் மாத ஊதியம் 18,000 வழங்க வேண்டும், வார விடுமுறை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை முன்பு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் தொிவித்துள்ளனர்.