Skip to main content

ஜெயலலிதாவின் சொத்துகளில் 50% பங்கு கோரி முதியவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு! 

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

Elderly case in High Court demanding 50% share in Jayalalithaa's assets!

 

ஜெயலலிதாவின் பாதி சொத்தைத் தனக்கு வழங்க வேண்டும் என்றும், தான் அவரது மூத்த சகோதரர் என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் முதியவர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

கர்நாடகா மாநிலம், மைசூருவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தந்தையின் முதல் மனைவியின் மகன் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவியான ஜெயம்மா-வின் ஒரே வாரிசு நான். அதன் பிறகு, வேதவள்ளியை தனது தந்தை திருமணம் செய்துக் கொண்டதன் மூலம் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் ஜெயலலிதாவும், அவரது சகோதரர் ஜெயக்குமாரும் எனக்கு சகோதரர், சகோதரி என்று முதியவர் சொந்தம் கொண்டாடியுள்ளார். 

 

கடந்த 1950- ஆம் ஆண்டு ஜீவனாம்சம் கேட்டு தனது தாய் ஜெயம்மா மைசூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கில் ஜெயலலிதா ஜெயக்குமார் மற்றும் அவர்களது தாய் வேதவள்ளி எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்ததாகவும் முதியவர் வாசுதேவன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஜெயக்குமார் இறந்துவிட்ட நிலையில், ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான் தான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஜெயலலிதாவின் சொத்துகளில் 50% பங்கு எனக்கு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்