!['Education and medicine are the two eyes of our government'-MUG Stalin's tweet](http://image.nakkheeran.in/cdn/farfuture/R-aoRNAWINSEOdUkvhmAlO9SLti4X-TKRReE_YKPN3w/1657856446/sites/default/files/inline-images/t13.jpg)
இன்று (ஜூலை 15) காமராஜர் பிறந்தநாள் தமிழக அரசால் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில் இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம். கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்!
தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்' தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்!
— M.K.Stalin (@mkstalin) July 15, 2022
போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! (1/2) pic.twitter.com/EMFTNUlPbI