
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் - வம்பன் இடையே பிரதான சாலை ஓரத்தில் திருவரங்குளம் ஊராட்சிக்கு குடிதண்ணீருக்காக 10க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 8 அங்குல ஆழ்குழாய் கிணறு, 6 அங்குல குழாயுடன் 4 ஆழ்குழாய் கிணறுகள் உள்பட 5 ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்ததை நக்கீரன் இணையத்தில் படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஆலங்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் திருவரங்குளம் ஊராட்சி நிர்வாகத்தினர் இணைந்து அவசரம் அவசரமாக ஆழ்குழாய் கிணறுகளை தற்காலிகமாக மூடியுள்ளனர். மேலும், பயன்படுத்தப்படாத இந்த ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் சேமிப்பு தொட்டிகளாக பயன்படுத்தும்விதமாக மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மீண்டும் ஒரு நடுக்காட்டுப்பட்டி சம்பவம் நடக்காமல் ஆழ்குழாய் கிணறுகளை மூடியதை பொது மக்கள் வரவேற்கின்றனர்.