தமிழக காவல்துறையில் பணியாற்றும் 67 ஆய்வாளர்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) / உதவி ஆணையராக (ஏசிபி) பதவி உயர்வு இன்று பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் ஏ.அறிவழகன் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கும், சேலம் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் எஸ்.சீனிவாசன் பதவி உயர்வு பெற்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உள்கோட்ட டிஎஸ்பி ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல் மாவட்ட எஸ்பிசிஐடி பிரிவு ஆய்வாளர் ஏ.பழனிசாமி பதவி உயர்வு பெற்று அதே மாவட்டத்தில் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு டிஎஸ்பி ஆகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் ஆய்வாளர் டி.ரவிச்சந்திரன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் முருகானந்தம், தர்மபுரி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி ஆகவும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆய்வாளர் சேகர் பதவி உயர்வு பெற்று, சேலம் மாநகர மேற்கு குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்ட எஸ்டிஎப் பிரிவு ஆய்வாளர் ஜெய்சிங் பதவி உயர்வு பெற்று நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்கோட்ட டிஎஸ்பி ஆகவும், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் குணசேகரன் பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர குற்ற ஆவணக்காப்பக உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேற்கண்டவர்கள் உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்ட, மாநகரங்களில் பணியாற்றி வரும் 67 காவல்துறை ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி இன்று பிறப்பித்துள்ளார்.