Published on 05/06/2019 | Edited on 05/06/2019
இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது.

நீட் பிரச்னையை நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக எழுப்பி உரிய தீர்வை காண திமுக முயற்சிக்கும். எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட் பிரச்னையை திமுக எம்பிக்கள் எழுப்புவார்கள். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற அதிமுக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய பாஜக அரசு உடனடியாக ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும். மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசின் கடமை என்பதை பிரதமர் உணரவேண்டும் எனக்கூறியுள்ளார்.