Published on 15/03/2018 | Edited on 15/03/2018


தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்பும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.