Published on 07/11/2020 | Edited on 07/11/2020
![dmk mk stalin birthday wishes to kamal haasan](http://image.nakkheeran.in/cdn/farfuture/OYPOJ40IpPT5SVO3VGkGUVQzsXFsuYzHsmNKc3LVOXc/1604729465/sites/default/files/inline-images/mk%20stalin%20%285%29_17.jpg)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 66- வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மு.க.ஸ்டாலினும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "முத்தமிழறிஞர் கலைஞரால் 'கலைஞானி' என்று போற்றப்பட்ட, எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்குரிய நண்பர் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நலமுடன் நீண்ட காலம் வாழ்க!" என குறிப்பிட்டுள்ளார்.