Published on 12/09/2022 | Edited on 12/09/2022

மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக வரும் செப்.16 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தொடர் அழுத்தத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் அதிகரித்துள்ளது எனத் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வரும் அதிமுக தற்பொழுது போராட்டத்தை அறிவித்துள்ளது. மின்கட்டண உயர்வை திரும்ப வலியுறுத்தி வரும் செப்.16 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் காலை 10.30 மணிக்கு போராட்டம் நடைபெறும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 'மக்கள் நலத்திட்டங்களை முடக்கி, சொத்துவரி, மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி மக்களை துன்பக்கடலில் ஆழ்த்தியுள்ளது திமுக'எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.