Skip to main content

வேட்புமனு தாக்கல் நிறைவு - திமுக 4; அதிமுக 2 இடங்களில் வெற்றி உறுதி

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

kதச

 

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக கூட்டணி நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும், அதிமுக இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் கைப்பற்றும். அந்த வகையில், திமுக மூன்று இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது. அதிமுக சார்பில் இரண்டு இடங்களுக்கு வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக ஒன்றிய செயலாளர் தருமர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

 

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் தேர்தல் நடைபெறுமா? வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் பிரதான கட்சிகளின் சார்பில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராததால் இவர்கள் ஆறு பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குச் செல்ல உள்ளனர். மேலும், சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் வேட்புமனுவை 10க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் என்ற விதி இருப்பதனால் இவர்கள் அனைவரின் வேட்பு மனுவும் நாளை தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்