Skip to main content

தேனியில் தீரன் சின்னமலைக்கு  சிலை! எடப்பாடிக்கு அனைத்து கவுண்டர் சமூகத்தினர் கோரிக்கை!!

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

 

திண்டுக்கல் மாவட்டத்தில்  உள்ள வத்தலகுண்டில் அனைத்து கவுண்டர்கள் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி வத்தலகுண்டு அருகே உள்ள கணவாய்ப்பட்டி ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

 

d

     

இந்த விழாவில்  சங்க நிறுவனத் தலைவர் வீரப்பன்  அன்னதானம் வழங்கினார்.  நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ராமசாமி மாநிலத் துணைத் தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள்  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

 

 முன்னதாக நடந்த சங்க செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சங்க நிறுவன தலைவர் வீரப்பன்,  தேனி மாவட்டத்தில் அனைத்து கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.  அவர்களின் நீண்ட நாள் விருப்பமான சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு தேனி மாவட்டம் கம்பத்தில் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றித் தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக கூறினார்.

சார்ந்த செய்திகள்