திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இருக்கக்கூடிய காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது.
மதுரையிலிருந்து திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள் மோடியைச் சந்தித்து வரவேற்றனர். பாஜக சார்பிலும் பொன். ராதாகிருஷ்ணன் போன்றோர் மோடியைச் சந்தித்து வரவேற்றனர்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் முக.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகையில், “ஒற்றுமையான சுதந்திரமான இந்தியாவை உருவாக்க மகாத்மா பாடுபட்டார். இளைஞர்களின் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. பெண்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி.
கிராமங்கள் சுயச்சார்பு உடையதாக இருப்பதன் மூலம் நாடு சுயச்சார்பு உடையதாக மாறும். இத்தகைய காந்திய சிந்தனையின் அடிப்படையிலே தான் மத்திய அரசு சுயச்சார்பு இந்தியாவை உருவாக்குகிறது. இப்போது இருக்கும் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்குக் காந்திய சிந்தனைகளே தீர்வாக உள்ளது. கிராமத்தின் ஆன்மாதான் நகரத்தின் வளர்ச்சி. கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மதிப்பு அதிகரிக்க வேண்டும்.
எரிசக்தித் துறையில் இந்தியா தற்சார்பு உடையதாக மாறும். இயற்கை விவசாயம் நாட்டில் அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி” எனக் கூறினார்.