Skip to main content

சேலத்தில் டெங்கு காய்ச்சல்; 7 வயது சிறுமி பலி!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

சேலம் மாவட்டம், தாரமங்கலம் கோனேரிவளவு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (35). கூலித்தொழிலாளி. இவருக்கு 7 வயதில் அனுஸ்ரீ என்ற மகள் இருந்தார். வீடு அருகே உள்ள அரசுப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

 

 Dengue fever in Salem

 

கடந்த சில நாள்களுக்கு முன்பு, அனுஸ்ரீக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை தரப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி வெள்ளிக்கிழமை (நவ. 15) அதிகாலையில் இறந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்