Skip to main content

புதுசத்திரத்தில் சுருக்குமடி வலையில் பிடித்த 20 டன் மீன்கள் பறிமுதல்

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
CUDDALORE

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடித்த 20 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

 

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்களை பிடிக்கக்கூடாது என மீனவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு உள்ளது.  அதையும் மீறி சிலர் கடந்த காலங்களில் மீன் பிடித்ததால் அந்த பகுதியில் தொடர் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

 

CUDDALORE


இந்த நிலையில் அந்த பகுதியிலுள்ள சில மீனவர்கள் சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க வியாழனன்று கடலுக்குச் சென்றனர். இதனை அறிந்த சுருக்குமடி மீன்வலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் நாகேஸ்வரனுக்கு தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் சுருக்குமடி வலையில் பிடித்த மீன்களை மீனவர்கள் 7 வாகனம் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எடுத்துச்சென்றனர்.  இந்த நிலையில் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் அமுதா மற்றும் காவல்துறையினர் உதவியுடன் 7 வாகனங்களையும் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அனைத்து வாகனங்களையும் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்த மீன்கள் ஏலத்தில் விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை மீனவர்கள் திருமூர்த்தி, சிவா, தமிழன்பன் ஆகிய 3 பேர், பறிமுதல் செய்த மீன்களை ரூ3.5 லட்சத்திற்கு ஏலம் எடுத்து மீன்களை மீட்டுச் சென்றனர். ஒரே நேரத்தில் 20 டன் மீன்களை பறிமுதல் செய்ததால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்