Skip to main content

"என்.எல்.சி.யில் மே மாதம் நடந்த விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கும் தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும்"- மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்! 

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

CUDDALORE DISTRICT NLC NEYVELI BOILER INCIDENT EMPLOYEES

 

கடந்த 01- ஆம் தேதி என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5- ஆவது கொதிகலன் வெடித்த விபத்தில் சம்பவ இடத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 17 பேர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி என்.எல்.சி. அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார். அதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. அதையடுத்து என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 3 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

CUDDALORE DISTRICT NLC NEYVELI BOILER INCIDENT EMPLOYEES

 

இந்நிலையில் தமிழக அரசு என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களின் 7 குடும்பத்துக்கு தலா 3 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிதி உதவியும் வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது' என கூறியுள்ள பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஏற்கனவே கடந்த மே மாதத்தில் இதேபோன்று 6- ஆவது கொதிகலன் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கும் தமிழக அரசின் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

CUDDALORE DISTRICT NLC NEYVELI BOILER INCIDENT EMPLOYEES

 

இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மருத்துவர் ராமதாஸ், "கடந்த 1- ஆம் தேதி என்.எல்.சி.யில் நடந்த கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடுகளை என்.எல்.சி. நிறுவனம் கடந்த மே மாதத்தில் இதேபோன்று பலியானவர்களின் குடும்பங்களுக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதே போன்று தமிழக அரசும் கடந்த மே மாதத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்