Skip to main content

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆய்வு மிகவும் முக்கியமானது- நாசா விஞ்ஞானி டொனால்டு எ.தாமஸ்

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

நிலவின் தென் துருவத்துக்கு சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆய்வு மிகவும் முக்கியமானது என்று நாசா விஞ்ஞானி  டொனால்டு எ.தாமஸ் கூறியுள்ளார்.  

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி 4 முறை விண்வெளி பயணம் கொண்ட விஞ்ஞானி டொனால்டு எ.தாமஸ் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று குமரி மாவட்ட பள்ளி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றை நாகர்கோவில் தனியார் பள்ளி ஒன்று ஏற்பாடு செய்தியிருந்தது. இதில் 1000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

 chandrayan 2 probe is crucial to the Moon's south pole - NASA scientist Donald E. Thomas

 

மாணவர்களை பார்த்து உற்சாகம் அடைந்த விஞ்ஞானி டொனால்டு எ.தாமஸ் மாணவர்கள் கேட்ட  அறிவியல் பூர்வமான கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் மாணவர்களின் அறிவுப்பூர்வமான இந்த கேள்விகள் என்னை வியக்க வைத்து விட்டது என்று மாணவர்களை பாராட்டியதோடு விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்து சாதனை புரிந்த நாட்களை நினைவு கூர்ந்தும், நான்கு முறை விண்வெளி பயணம் மேற்கொண்ட எனது அனுபவங்களை இந்தியா மாணவர்களுக்கு அதை கற்று கொடுக்கும் பாடமாக அமைந்தியிருப்பது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியுமாக உள்ளது எனக்கூறினார்.

 

 chandrayan 2 probe is crucial to the Moon's south pole - NASA scientist Donald E. Thomas

 

உலகின் சிறந்த விண்வெளி பயணம் செய்த நாடு அதில் முதலில் யார்?; இண்டாவது யார்? என்று பட்டியல் போட முடியாது. எல்லாமே ஒரே கூரையின் கீழ் ஒன்று பட்ட முனைப்பில் இணைந்த உழைப்புதான். நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்தியிருப்பதாகவும் கூறினார் நாசா விஞ்ஞானி டொனால்டு எ.தாமஸ்.

 

 



 

 
 

சார்ந்த செய்திகள்