Published on 19/05/2021 | Edited on 19/05/2021

கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கே. பாலசுப்பிரமணியம் இன்று (19.05.2021) பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். இதற்கு கடலூர் மாவட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியைப் பின்பற்றி கரோனாவை ஒழிக்க மாவட்ட மக்கள் கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் "அரசின் நலத்திட்டங்கள் பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் சென்றடைய பாடுபடுவேன்" என்றும் அவர் தெரிவித்தார்.