வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் மற்றும் சான்றோர்குப்பம் பகுதியில் பாலாற்று படுக்கை அருகில் விவசாய நிலம் வைத்துள்ளவர் லீக்மிசந்து ஜெயின். அந்த நிலத்தில் ஜூலை 9 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளி லாரிகளில் நிரப்பி அனுப்பிக் கொண்டுயிருப்பதை ஜூலை 10 ஆம் தேதி விடியற்காலை பார்த்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியான அப்பகுதி மக்கள், காலை 11 மணியளவில் மணல் குவாரியை முற்றுகையிட்டு மணல் ஏற்றுவதை தடுத்துள்ளனர்.
மேலும் இதுப்பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர். தகவலின் பேரில் அங்கே வந்த ஆம்பூர் போலீசார் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த இரண்டு ஜேசிபி இயந்திரங்கள், 4 டிப்பர் லாரிகள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஓட்டுனர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பாலாற்றில் மணல் அள்ளி வெளிமாநிலத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்தது. மணல் அள்ளிய லாரிகள் அதிமுக பிரமுகர்களுக்கு சொந்தமானது என்பதை அதில் உள்ள அதிமுகவின் கலரே காட்டிக்கொடுத்தது.
அதே போல், மணல் அள்ள லீக்மிசந்து ஜெயின்க்கு தைரியம் தந்ததே ஆளும் கட்சி பிரமுர்கள் தான். அதனால் தான் வண்டிகளை மட்டும் பிடித்த காவல்துறையினர், அதன் ஓட்டுநர்களை கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளது. சம்மந்தப்பட்ட லீக்மிசந்தை கைது செய்யாமல் இருக்க போலீசாருக்கு அரசியல் மட்டத்தில் இருந்து அழுத்தம் வருவதால், அவரிடம் டீலிங் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்த ஆம்பூர் வாசிகள். பெருசுப்படுத்தாதிங்க, தேர்தல் முடிஞ்சதும் பார்த்துக்கலாம் என சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.