கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேருக்கு கரோனா பாதிப்புள்ளது. இந்நிலையில் இன்று வந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நெல்லிக்குப்பத்தில் 1, சிதம்பரத்தில் 1, லால்பேட்டையில் 2 என மேலும் 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 4 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 2 வயது குழந்தையும் கரோனா தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை என்றும் கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை தொடரும் என்றும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் இப்போதுள்ள ஊரடங்கு நடைமுறையே மே 3-ம் தேதி வரை தொடரும் என்று கூறிய அவர் "கடலூர் ஹாட்ஸ்பாட் (சிவப்பு மண்டலம்) பகுதியாக உள்ளதால் இது மேலும் கடுமையாக்கப்படும்" எனவும் கூறியுள்ளார்.