Skip to main content
Breaking News
Breaking

மோடி வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி; போராட்டத்தில் தள்ளுமுள்ளு!!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019

 

protest

 

இன்று திருப்பூர் வர இருக்கும் மோடியின் வருகையை எதிர்த்து திருப்பூர் ரயில் நிலையத்தில் மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டத்தில் தற்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

 

இன்று காலை முதலே இங்கு போராட்டம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது மதிமுக தொண்டர்கள் திருப்பூர் ரயில் நிலையம் அருகே கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த கருப்பு கொடி போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்