![CORONAVIRUS LOCKDOWN FOUR DISTRICTS TNEB PAY TIME EXTEND](http://image.nakkheeran.in/cdn/farfuture/JYIMAyGIJtr39_PbE1BFY3EaumAh-OZFm28n-bMXX-I/1592650677/sites/default/files/inline-images/EB%204563.jpg)
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பொதுமுடக்க பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15- ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்.
செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தின் பொதுமுடக்க பகுதிகளிலும் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15- ஆம் தேதி வரை மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 19- 30 ஆம் தேதி வரை மின் கணக்கீட்டு தேதி உள்ளவர்களுக்கு முந்தைய மாதப்படி மின்கட்டணம் செலுத்த வேண்டும். LT நுகர்வோர்களுக்கு பிப்ரவரி, LTCT நுகர்வோருக்கு மே மாத மின்கட்டணத்தை ஜூன் மாதத்திற்கு கணக்கீடு செய்யப்படும். நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை மின்கட்டண வசூல் மையங்கள் செயல்படாது. ஆன்லைன், பேமெண்ட் கேட்வே, பி.பி.பி.எஸ். மூலம் மின்கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.