Published on 21/03/2020 | Edited on 21/03/2020
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. நாளை பிரதமர் மோடி சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு நாளை பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.