கரோனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது திருச்சி.
இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துமனையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 22 பேருக்கு கரோனோ தொற்றுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறனர். புறநகர் பகுதியில் முசிறி -1, துறையூர் -2, மணிகண்டம் -3, மண்ணச்சநல்லூர் -1, மணப்பாறை -5, லால்குடி -2, திருவரம்பூர் -3, உப்பிலியாபுரம் -2 என 19 பேருக்கு நோய் தொற்று பரவியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது புதிதாக 6 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியை சேர்ந்த -2 பேர், துறையூர் -1, புள்ளம்பாடி -1, மணிகண்டன்-1, உப்பிலியாபுரத்தைச் சேர்ந்த ஒருவர் என சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் முக்கிய பிரபலங்கள் பலரும் கரோனோ நோய் தொற்றினால் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். பிரபலங்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளிலே சிகிச்சை பெறுகிறார்கள்.
திருச்சியில் வியாபாரிகள் சங்க முக்கிய பிரமுகருக்கும் கரோனோ நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது உறுதியானவுடன் திருச்சி காவிரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் திருச்சியில் உள்ள முக்கிய வியாபாரிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக காந்தி சந்தை தொடர்பான பிரச்சனையில் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களுடன் தினமும் தொடர்பிலே இருந்த அந்த வியாபாரிகள் சங்க பிரமுகருக்கு கரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதால் தற்போது மீடியாக்காரர்கள் கலக்கத்தில் உள்ளனர்.