Published on 11/06/2021 | Edited on 11/06/2021

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசு, கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணை 2,000 ரூபாய்க்கான டோக்கன் இன்றுமுதல் (11.06.2021) ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது.
வரும் 14ஆம் தேதிவரை 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெறுவதற்கான டோக்கனும் வழங்கப்பட உள்ளது. ஜூன் 15 முதல் அரிசி அட்டைதாரர்கள் காலை 8 மணிமுதல் 12 மணிவரை 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்புகளை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.