திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக திங்கள்கிழமை மாலை மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். இரவு முழுவதும் அங்கேயே கூடியிருந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.