Published on 15/07/2020 | Edited on 15/07/2020

கோவை, துடியலூரில் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றும் ஐந்து போலீசாருக்கு கரோனா உறுதியானதையடுத்து, போலீஸ் ஸ்டேசன் மூடப்பட்டது. அலுவல் பணிகள் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது.
மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் போலீஸ் ஸ்டேசன் உள்ளது. இங்கு பணியாற்றும் 31 போலீசாருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கரோனா பரிசோதனை நடந்தது. அதன் முடிவுகள் வந்ததில், 45 வயது ஆண், 24 வயதுடைய 3 ஆண்கள், 32 வயது பெண் போலீசாருக்கு தொற்று உள்ளது உறுதியானது.
இதனையடுத்து போலீஸ் ஸ்டேசன் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டு, உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தும் பணி நடந்தது. அடுத்த 4 நாட்கள், 2 கி.மீ., தொலைவில் உள்ள தொப்பம்பட்டி பிரிவு வேணுகானம் திருமண மண்டபத்தில் போலீஸ் ஸ்டேசன் தற்காலிகமாக செயல்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.