Skip to main content

நெருப்பு வளைய சூரிய கிரகணம் தொடங்கியது!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வழியே சூரிய கிரகணம் பகுதி அளவில் தோன்றத் தொடங்கியது. நெருப்பு வளையம் சூரிய கிரகணம் சவுதி ஊட்டியில் பகுதி அளவில் தோன்ற தொடங்கியுள்ளது.


சவுதி அரேபியாவின் கடல் பகுதியில் வளைய சூரிய கிரகணம் தென்படத் தொடங்கியது. வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்றும், சூரியக் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தொடங்கியது. 

Solar eclipse begins india and other countries


அமாவாசை அன்று நிலா மறைக்கும் போது சூரியன் நெருப்பு வளையமாக தென்பட்டால், அது வளைய சூரிய கிரகணம் ஆகும். இந்தியாவில் காலை 08.03 மணி முதல் காலை 11.19 மணி வரை சூரிய கிரகணம் தெரியும். அடுத்த முழு சூரிய கிரகணம் ராஜஸ்தான் உத்தரகாண்ட் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 2020 ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி தோன்றுகிறது.
 

தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2031 ஆம் ஆண்டு மே 21-ம் தேதி தென்படும். சூரிய கிரகணத்தால் தென்தமிழகத்தில் உள் நிழலும் வடதமிழகத்தில் வெளி நிழலும் படியும். சென்னையில் வளைய சூரிய கிரகணம் பகுதி அளவிலேயே காலை 09. 34 மணிக்கு தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Solar eclipse begins india and other countries


அதேபோல் சேலம் நாகர்கோயில் 09.31, புதுச்சேரியில் 09.34, மண்டபத்தில் 09.33 மணிக்கு பகுதி கிரகணம் தென்படும். மேலும் கோவையில் காலை 09.27- 09.30; திருப்பூரில் 09.28- 09.31; கரூர், திண்டுக்கல்லில் 09.29- 09.32 மணி வரை தெரியும். மதுரையில் 09.31- 09.32; காரைக்குடி, சிவகங்கை, திருச்சியில் காலை 09.31- 09.33 மணி வரை முழு வளைய சூரிய கிரகணம் தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

முழு வளைய சூரிய கிரகணத்தின்போது சூரிய ஒளியை சந்திரன் 93 சதவீதம் அளவுக்கு மறைக்கும். தமிழகத்தில் முதலில் ஊட்டியில் முழு வளைய சூரிய கிரகணம் காலை 09.26 மணிக்கு தொடங்கி 09.29 மணி வரை நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்