




Published on 02/09/2023 | Edited on 02/09/2023
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து தேனாம்பேட்டை மண்டலம் காதர் நவாஸ்கான் சாலையில் உலக வங்கியின் சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் மாநில உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மற்றும் சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூபாய் 19 கோடியே 81 லட்சம் மதிப்பில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.