Published on 02/03/2021 | Edited on 02/03/2021
![jj](http://image.nakkheeran.in/cdn/farfuture/agFj7XbrIRhBfM4JGCBcVJHI3QCvxTNaAibXYR99QpU/1614674071/sites/default/files/inline-images/222_17.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று (01.03.2021) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், அதைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மமகவுக்கு 2 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டன.
இன்று (02.03.2021) காலை மார்க்சிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.