
திருவாரூர் அருகே ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் முழ்கி கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். மற்றொரு மாணவர் பொதுமக்களால் உயிருடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையத்தை சேர்ந்தவர் இப்ரஹிம். இவரது மகன் சபிபுதீன் வயது 19. நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படித்துவரும் அவனது நன்பனான புலிவலத்தை சேர்ந்த அபினாஷ் வயது 20 சபிபுதீன். இருவரும் சில
நண்பர்களுடன் திருவாரூர் அருகே பாண்டவையாற்றின் மருவத்தூர் சட்ரெஸ் அருகே குளித்துள்ளனர். இதில் ஆற்றில் ஏற்பட்ட திடிர் சுழலில் சபிபுதீன் மற்றும் அபினாஷ் இருவரும் சிக்கி கொண்டு கூச்சலிட்டனர். கூச்சல் சத்தம் கேட்ட பொதுமக்கள் சுழலில் சிக்கிய இருவரையும் மீட்க முயற்சித்தனர். இதில் அபினாஷை முதலில் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சபிபுதீனைமீட்க முடியவில்லை நீண்ட தேடுதலுக்கு பிறகு அவனை இறந்து பினமாகவே மீட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபினாஷ்க்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்று உடல் மீட்கப்பட்டும் மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டும் இதுவரை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பதால் பொதுமக்களும் சமுக ஆர்வலர்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.