திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதால் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் பி.ஏ .பிஎஸ்சி. பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்று வருகிறது.
இன்று இறுதி கட்ட மாணவர் சேர்க்கை என்பதால் கல்லூரியில் சேர 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கடந்த மூன்று மாதங்களாக காத்திருந்தவர்கள் இன்று அனைவருக்கும் சேர்க்கை வழங்குவதாக கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மாலை கல்லூரி முதல்வர் சுரேஷ் மாணவ மாணவிகள் பெற்றோர்களிடம் கல்லூரியில் அட்மிஷன் முடிந்து விட்டதாகவும் இனிமேல் கல்லூரிக்கு அட்மின் சமந்தமாக யாரும் வரவேண்டாம் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுமாறு கேட்டனர். வழங்காததால் ஆத்திரமடைந்த திமுக நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறிய கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். ஆத்திரமடைந்த கல்லூரி முதல்வர் சுரேஷ், தான் வைத்திருந்த செல்போனை உடைத்து விட்டு காரில் ஏறி சென்றுவிட்டார் .
இதுகுறித்து திமுக நகர செயலாளர் பூக்கடை கணேசன் கூறியதாவது: இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் 5ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை வாங்கொண்டு முறைகேடு நடைபெறுவதாகவும் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முறைகேடு குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் கூறினர். இதனால் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.