Skip to main content

இலங்கைக்கு மஞ்சள் கடத்தியவர்களை மடக்கிப் பிடித்த கடலோர காவல்படையினர்!!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021
Coast Guard arrests turmeric smugglers in Sri Lanka

 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ மஞ்சள் சிக்கியது. கடத்தலுக்குப் பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர். இலங்கையில் விரளி மஞ்சள், பீடி இலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் தமிழ்நாட்டின் விரளி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களைக் கடத்திச் சென்று பல மடங்கு லாபம் சம்பாதித்துவருகின்றனர். கடந்த 6 மாதங்களில் மஞ்சள், சிகரெட் பாக்கெட்டுகள், பீடி இலைகள் ஆகியவை கடத்த முயற்சிகள் நடந்தன.

 

தூத்துக்குடி மரைன் காவல்படையிடம் பிடிபட்ட சம்பவங்கள் 10க்கும் மேல் நடந்துள்ளன. இந்நிலையில், தூத்துக்குடி மரைன் போலீஸ் எல்லைக்குட்பட்ட மீனவர் காலனி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு மஞ்சள் உள்ளிட்ட பெருட்கள் கடத்தப்படுவதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மீனவர் காலனி கடல் பகுதியில் இன்ஸ்பெக்டர் சைரஸ், எஸ்.ஐ. ரென்னிஸ், தனிப்படை எஸ்.ஐ. ஆசைத்தம்பி உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோத்து சென்றனர். அப்போது கடற்கரையில் நின்றிருறந்த மினி லாரி மற்றும் படகை சுற்றி வளைத்தனர். போலீசாரைக் கண்டதும் படகில் வந்தவர்கள் கடலுக்குள் குதித்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டிச் சென்று 5 பேரை மடக்கினர்.

 

Coast Guard arrests turmeric smugglers in Sri Lanka

 

விசரணையில் அவர்கள், கீழ்வைப்பாறைச் சேர்ந்த அருண் மகன் ராபிஸ்டன் (21) ஜே.க மகன் விதுஸ்டன்(20), அருள்(55), தூத்துக்குடி சிலுவைப்பட்டி இந்திரா நகர் ஈஸ்வரன் மகன் கோவிந்த பெருமாள் (36), தானமுத்து நகர் சுனாமி காலனி மந்திரமூர்த்தி மகன் சேர்மராஜா (19) என்பது தெரியவந்தது. மேலும் படகு, 30 கிலோ எடை கொண்ட 84 மஞ்சள் மூட்டைகள், மினி லாரி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சிக்கிய 2,500 கிலோ மஞ்சளின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் ஆகும். இந்த மஞ்சள் மூட்டைகள் கடத்தலில் தொடர்புடைய மைதீன் என்பவரை மரைன் போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்