ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஏட்டுக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு, சீனிவாசன் என்பவரின் பாஸ்போர்ட் வெரிபிகேஷன் வந்துள்ளது. அப்போது திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியிலிருந்தவர் ரவி. இவர், சீனிவாசனின் பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக ரூ. 500 லஞ்சம் வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்துவந்தது. மேலும், வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதனை நீதிபதி கார்த்திகேயன் விசாரணை செய்துவந்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கிய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம், ஏட்டு ரவிக்கு ஏட்டு ரவிக்கு, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.