சிதம்பரம் இளமையாக்கினார் கோவில், அந்நகரத்தில் பழமை வாய்ந்த கோவிலாகும். கடந்த 5 தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் கோவில் குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. பின்னர், அப்பகுதியில் உள்ள சாலை உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் நகராட்சி சார்பில் தடுப்புகளை அமைத்துப் பாதுகாத்து வருகின்றனர். தற்போது சாலை சீரமைப்பு பணி மண் மூட்டைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று ஆய்வு செய்கிறார். இதனையொட்டி பணிகள் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், கனிம வளத்துறை அமைச்சர் சண்முகம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ முருகுமாறன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் மற்றும் நகராட்சி அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் முதல்வர் பார்வையிடும் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.