Published on 14/06/2019 | Edited on 14/06/2019
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலைமையில்,விஷால்,கார்த்தி ஆகியோர் அடங்கிய பாண்டவர் அணியும், இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் அடங்கிய சுவாமி ஷங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர் இந்நிலையில், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 பேர் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் விதிமுறைகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால், நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. மொத்தம் 68 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ரமேஷ் கண்ணா மற்றும் விமலின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்கியராஜ் அணியினர் கமல்,விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.இவர்களை அடுத்து நாசர் அணியினரும் ரஜினி,கமல்,விஜயகாந்த் மற்றும் சில முன்னணி நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.