Published on 29/12/2024 | Edited on 29/12/2024
தமிழக முதல்வர் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று தமிழக முதல்வர் செல்ல இருக்கிறார்.
இன்று தூத்துக்குடி செல்லும் தமிழக முதல்வர் இன்று மாலை 4:50 மணிக்கு தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள மினி டைட்டில் பார்க்கை திறந்து வைக்க இருக்கிறார். அதனையடுத்து திங்கட்கிழமை காலை 10 மணிக்கு புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்க பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார். புதுமைப்பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் 75 ஆயிரத்து 28 மாணவியரின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கான விரிவாக்க நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் நாளை பங்கு கொள்ள இருக்கிறார்.