Skip to main content

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் இன்று  நேரில் ஆய்வு

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Chief Minister stalin in person inspection in Delta districts today

 

காவிரி டெல்டா பகுதிகளில் நீர்வழித் தடங்களையும் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். 

 

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இந்த தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். மேலும் மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரைக்கும் செல்லும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார். தஞ்சை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தூர்வாரும் பணியினைப் பார்வையிடும் முதல்வர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகளையும் வழங்கவுள்ளார். இதற்காக நேற்று இரவு தஞ்சை சென்ற முதல்வருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்