



மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/10/2021) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்தநாளையொட்டி, கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கும் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கும் முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், மதுரை மாநகராட்சி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.