திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சு.திருநாவுக்கரசர் இன்று புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை, கீரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது வாக்காளர்களிடம் அவர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இரட்டை இலை கட்சி நிற்கவில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவோடு நான் பணியாற்றிய முறையில் கேட்கிறேன். எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டவன் நான். எம்ஜிஆர், ஜெயலலிதா விற்கு வாக்களிக்க விரும்பமுள்ளவர்கள். அவர்கள் கட்சி போட்டியிடாத இடத்தில எனக்கு வாக்களிக்க வேண்டும். அடையாளம் தெரியாத விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டு போடுவதால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை, சுயேட்சையாக உள்ள அ.ம.மு.க வேட்பாளருக்கு வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அறித்தார். அப்போது.. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் மேகதாது அணை குறித்து ராகுல் காந்திக்கு அந்த மாநில நிர்வாகிகள் சொன்ன தகவல் அடிப்படையில் பேசி இருப்பார். நாங்கள் தமிழகத்தின் நிலையை அவரிடம் எடுத்துக் கூறி தமிழக உரிமையை நிலைநாட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில் நான் பாடுபடுவேன்.. தமிழகத்திற்கு பயன் கிடைக்கும் அளவிற்கு நாங்கள் செயல்படுவோம்,
அ.தி.மு.க ஓட்டுகளை உங்களுக்கு ஏன் போட வேண்டும் என்று கேட்கிறீர்கள்? என்ற கேளிவிக்கு, அதிமுகவை தலைவர் எம்ஜிஆர் தொடங்கி வளர்த்தார். தொடர்ந்து ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி. இப்போது அந்த கட்சிக்கு தற்போது தலைமை ஏற்று இருப்பவர்கள் கையில் இல்லை. தற்போது இந்த கட்சி சிதறிக்கிடக்கிறது, அதனால் அந்தக் கட்சியில் தொண்டர்கள் செய்வதறியாது மனச்சோர்வுடன் உள்ளனர். மன சோர்வை போக்கி அந்த தொண்டர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் பிரச்சாரம் செய்து வருகிறோம்.. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வாக்களிக்கும் உரிமை சுய உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் வாக்க ளிக்கலாம்,
தொடர்ந்து டிடிவி தினகரன் தற்போதுதான் கட்சி தொடங்கியுள்ளார். தேர்தல் ஆணையம் தற்போது அவருக்கு பரிசு பெட்டி சின்னத்தை வழங்கியுள்ளது அவர் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக தற்போது பிரச்சாரத்தின்போது ஏதேதோ கூறி வருகிறார்.
தற்போது நேரம் குறைவாக உள்ளதால் இன்னும் சில கிராமங்களுக்கு செல்ல முடியவில்லை. அவர்களிடம் சொல்லுங்கள். வெற்றி பெற்று நன்றி கூற வரும் போது விடுபட்ட அந்த கிராமங்களில் கோழியடித்து விருந்து சாப்பிட்டுவிட்டு செல்வொம் என்று சொல்லிவிடுங்கள் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கூறிச் சென்றார்.