Skip to main content

சென்னை புத்தக காட்சியைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

Chief Minister MK Stalin launches Chennai Book Fair

 

45வது சென்னை புத்தக காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

 

புத்தக காட்சியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர், புத்தக அரங்குகளை நேரில் சென்று பார்வையிட்டார். 5,000 சதுர அடியிலான பொருநை ஆற்றங்கரை நாகரிக தொல்பொருள் கண்காட்சி அரங்கையும் பார்வையிட்டார். மார்ச் 6- ஆம் தேதி வரை காலை 11.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை சென்னை புத்தக காட்சி நடைபெற உள்ளது. சுமார் 800 அரங்குகளில் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். புத்தக காட்சியைப் பார்க்க மாணவர்களுக்கு டிக்கெட் இலவசம்; மற்றவர்களுக்கு ரூபாய் 10 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். புத்தக காட்சிக்கான நுழைவுச் சீட்டை bapasi.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

 

கரோனா காரணமாக, ஜனவரியில் தொடங்கவிருந்த புத்தக காட்சி பிப்ரவரிக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்