
சென்னையில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு வட மாநில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடியில் தங்கள் கடைக்கு அருகில் தேங்கிய மழைநீரை மின்சார மோட்டார் மூலம் அகற்ற முயன்றபோது, மின்சாரம் தாக்கியதில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரு (35 வயது), பிங்கு (22 வயது) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று (05.01.2021) அதிகாலை முதல் அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.