
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பொதுத்தேர்வுகளை தமிழகத்தில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இந்த நிலையில் விபத்தில் சிக்கியபோதுm தலையில் கட்டுடன் வந்து தேர்வு எழுதிய மாணவியின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகா ஸ்ரீ என்ற 12 ஆம் வகுப்பு மாணவி தனியார் பள்ளியில் ஒன்றி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று முதல் முதல் பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் முதல் தேர்வு எழுதுவதற்காக காலையில் பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக கீழே தடுமாறி விழுந்துள்ளார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கார்த்திகா ஸ்ரீ அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு அங்கு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கட்டுப்போட்டு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சற்றும் மன தளராத கார்த்திகா ஸ்ரீ காலையில் ஆர்வமுடன் தலையில் கட்டுடன் தேர்வு அறைக்குத் தேர்வு எழுத வந்தார். மாணவியின் செயலை பார்த்து நெகிழ்ச்சியடைந்த தேர்வு நடந்தும் அலுவலர்கள் மாணவியை கட்டுடன் தேர்வு எழுத அனுமதித்தனர். அதன்பிறகு மாணவியும் தேர்வு எழுதினார். தலையில் படுகாயம் அடைந்த பிறகு கட்டுடன் வந்து தேர்வு எழுதிய மாணவிக்கு பலரும் பாராட்டுகளையும் ஆறுதலை கூறினர்.