Skip to main content

"சித்ரா வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும்"- காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

Published on 13/12/2020 | Edited on 13/12/2020

 

CHENNAI POLICE COMMISSIONER PRESS MEET

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 10,906 இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது. 

 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 499 தேர்வு மையங்களில் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதுகின்றனர். அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்வு நடத்தப்படுகிறது.  

 

இந்த நிலையில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு மையத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "சித்ரா வழக்கில் ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம்; அதனை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.  

 

சார்ந்த செய்திகள்